அதிமுகவில் கரை ஒதுங்கிய முக்கியப் புள்ளி – கலக்கத்தில் அமமுக !
ஜெயலலிதா மறைவிற்குப் பின் அமமுக-வில் இருந்த முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் இன்று மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக இரண்டாகப் பிரிந்தது. அதனால் அதிமுகவின் பலம் பாதியாகக் குறைந்து அமமுகவுக்கு சென்றது. மக்களவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்ததற்கு இந்த பிளவும் முக்கியமானக் காரணமானது.
தேர்தல் தோல்வியால் அமமுக-வுக்கு எதிர்காலம் இல்லை என நினைக்கும் பலர் கட்சித்தாவலில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் இன்பத் தமிழன் அமமுகவில் கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்து வந்த அவர் இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அதிமுக-வில் மீண்டும் இணைந்தார்.
இந்த சந்திப்பின் போது விருதுநகர் மாவட்ட செயலாளரும் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி உடன் இருந்தார். முக்கியமான நிர்வாகியான இன்பத்தமிழன் கட்சியை வென்றிருப்பது அமமுக வுக்கு மிகப்பெரிய இழப்பாக அமைந்துள்ளது.