Daily Horoscope

இனி திராவிடத்துக்கு வேலை இல்ல!.. தனுஷ் வருவாரு!.. மோகன்.ஜி. பதிவு!..

Updated: திங்கள், 27 ஜூலை 2026 (11:40 IST)
எம்.ஜி.ஆருக்கு பின் திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்த நடிகர் விஜய் தற்போது தமிழகத்தின் முதலமைச்சராக மாறியிருக்கிறார். இதையடுத்து, பிரபலமான நடிகராக இருந்தால் தமிழ்நாட்டில் முதலமைச்சராக முடியும் என்கிற எண்ணமும், ஆசையும் பலருக்கும் வந்திருக்கிறது.

விஷால் கூட சமீபத்தில் நான் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன் என்று கூறியிருந்தார். ஒருபக்கம் தனுஷ் தனது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார். நேற்று கூட ஒரு விழாவில் அவரின் ரசிகர்கள் முன்பு பேசிய தனுஷ்  ‘வெறுமனே போட்டோ எடுத்தோம்.. சந்தித்துக் கொண்டோம் என்பது மட்டுமல்லாமல் மக்களுக்கு சேவை செய்யுங்கள்.. உங்கள் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்டு செயல்படுங்கள்.. நாம் ஒரு இயக்கமாக மாற வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

எஸ்.ஏ.சந்திரசேகரரை போல கஸ்தூரி ராஜாவுக்கும் தனது மகன் தனுஷை அரசியலுக்கு கொண்டுவரும் எண்ணம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கு பின்னணியில்தான் 2 தனுசுக்கு தேசிய விருது கொடுக்கப்பட்டதாகவும் சிலர் சொல்கிறார்கள். மேலும், திமுக ஆதரவாளர் சூர்யா சேவியர் என்பவர் எக்ஸ் தளத்தில் தனுஷின் ஓம் பட போஸ்டர பகிர்ந்து ‘பிற்படுத்தப்பட்ட மற்றும் மொழிச் சிறுபான்மையினரை ஒருங்கிணைக்கும் ஏற்பாடு தான் அண்ணாமலைக்கான இலக்கு.

அதற்கு வலு சேர்க்கும் முதன்மை ஏற்பாடாகத்தான் நடிகர் தனுஷ் களமிறங்கப்படுகிறார். ஜோசப் விஜய்+அண்ணாமலை+ தனுஷ் (ரஜினி குடும்பத்தார் ஆதரவு) ஆகிய மூவரும் மாற்று முகங்களுடன் மறைமுகமாக ஒன்றிணைந்து நடத்தும் மும்முனைத்தாக்குதலில் தான் அடுத்து தமிழ்நாடு அரசியல் களம் நகரப்போகிறது.இதை முறியடிக்கும் வலுமிக்க எதிர்ப்பு அரசியலை கட்டமைப்பது தான் தமிழ்நாட்டை காக்கும் இலக்காக அமையும்’ என பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள இயக்குனர் மோகன்.ஜி தனது எக்ஸ் தளத்தில் ‘இவங்க எல்லாரும் பித்து புடிச்சி அலைய ஆரம்பிச்சிட்டாங்க... இனி திராவிடம் இங்கே தலை எடுக்காது.. இது ஆன்மீக மண்.. உங்க ஆட்டம் எல்லாம் முடிந்தது.. இனி கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு.. வெற்றிமாறன் சார் முருகன் படம் எடுத்து தான் ஆகனும்.. ஓம், நமச்சிவாய போன்ற தலைப்புகள் வரும்’ என பதிவிட்டிருக்கிறார்.
About Author
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More

எல்லாம் காட்டு

லண்டனில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செய்த ஆதவ் அர்ஜூனா.. வைரல் புகைப்படம்...

2 தொகுதி இடைத்தேர்தல் கருத்துக்கணிப்பு என்ன சொல்லுது? ஒன்னு கன்ஃபர்ம்.. இன்னொன்னு ஊசலாடுது...

டிஆர்பி ராஜா பதவி பறிபோகிறதா? உதயநிதியின் அதிரடி நடவடிக்கை?

ராஜினாமா செய்தவர்கள் மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதா? நீதிமன்றம் அதிருப்தி

இடைத்தேர்தலில் போட்டி இல்லை.. ஆனால் யாருக்கு ஆதரவு. டிவிஸ்ட் வைத்த அன்புமணி...

அடுத்த கட்டுரையில்
Show comments