பாரின் மாட்டுப்பாலை குடித்துதான் பெண்கள் பேரல் போல ஆகிவிட்டார்கள் – திமுக பேச்சாளர் லியோனி பேச்சால் சர்ச்சை!

Updated: வியாழன், 25 மார்ச் 2021 (08:55 IST)
தொண்டாமுத்தூரில் வேட்பாளர் கார்த்திகேய சேனாபதியை ஆதரித்து திமுக கொள்கை பரப்புச் செயலாளர் திண்டுக்கல் லியோனி பேசினார்.

திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர்களில் ஒருவரான திண்டுக்கல் லியோனி இப்போது தேர்தல் பிரச்சாரத்தில் பிஸியாக உள்ளார், கோவையில் முகாமிட்டுள்ள அவர் தொண்டாமுத்தூர் வேட்பாளர் கார்த்திகேய சேனாபதிக்காக வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அவர் ‘ நாட்டு மாடுகளைக் காப்பாற்ற பாடுபடுபவர் கார்த்திகேய சேனாபதி. மாடுகளில் பல வகை உண்டு. பாரின் மாடு எல்லாம் மெஷின் வைத்துதான் பால் கறப்பார்கள். அந்த மாடு எல்லாம் ஒரு மணிநேரத்துக்கு 40 லிட்டர் பால் கறக்கும். அதைக் குடித்துவிட்டுதான் நம் பெண்கள் பலூன் மாதிரி ஆகிவிட்டார்கள். அப்போதெல்லாம் நம் பெண்களின் இடுப்பு 8 போல இருக்கும். குழந்தைகளை தூக்கிவைத்தால் அப்படியே உட்கார்ந்துகொள்ளும். ஆனால் இன்று இடுப்பு பெறுத்து பேரல் போல ஆகிவிட்டார்கள்’ என்று பேசியுள்ளார். அவரின் இந்த பேச்சு அடங்கிய வீடியோ இணையத்தில் பரவி அவருக்குக் கண்டனங்கள் எழுந்துள்ளன.

எல்லாம் காட்டு

3வது முறையாக ஜனநாயகன் படம் பார்க்கும் விஜய்!.. அப்படி என்ன ஃபீலிங்!..

ஜனநாயகன் இன்று ரிலீஸ்!.. வெறிச்சோடிய தலைமை செயலகம்!...

அழகிரி மகள் கயல்விழி கோரிக்கை விஜய்யால் நிராகரிப்பு.. தவெகவில் சேரும் திட்டம் கேன்சலா?

ரோஹிணி தியேட்டர்ல்ல எதுக்கு நீட் போராட்டம் பண்ணனும்.. திமுகவுக்கு அரசியல் செய்ய வேற எதுவுமே கிடைக்கலையா?

சாதகமான நீதிமன்ற தீர்ப்பு.. 16 ஆண்டுகளுக்கு பின் நாடு திரும்பும் லலித் மோடி...

அடுத்த கட்டுரையில்
Show comments