செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 24 மார்ச் 2021 (12:52 IST)

திமுகவில் சீட் கிடைக்கல.. அதிமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்!

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் முன்னாள் அமைச்சர் சின்னசாமி திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் திமுகவில் கடந்த 10 ஆண்டுகளாக இருந்து வந்த முன்னாள் அமைச்சர் சின்னசாமி தற்போது அதிமுகவில் இணைந்துள்ளார்.

அதிமுகவில் இருந்தபோது மூன்று முறை எம்.எல்.ஏவாகவும், அமைச்சராகவும் பதவி வகித்த சின்னசாமி கடந்த 10 ஆண்டுகள் முன்னதாய் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். கடந்த 10 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்தும் திமுக தனக்கு உரிய அங்கீகாரம் அளிக்கவில்லை என கூறிய அவர், இன்று கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார்.