வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 17 ஏப்ரல் 2019 (18:57 IST)

தினகரன் கட்சி வேட்பாளரிடம் ரூ.43 லட்சம் பறிமுதல் : ஐடி துறையினர் அதிரடி

தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்நிலையில் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள  சாத்தூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சுப்பிரமணியன் வீட்டில் வருமான வரித்துறையினர் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே சுப்பிரமணியனுக்குச் சொந்தமான தோப்பில் கட்டுக்கட்டாக பணத்தை மறைத்து வைத்திருந்தாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது ரூ. 10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
 
இதனையடுத்து சுப்பிரமணியனின் பம்பு செட்டுக்குள் இருந்து ரு. 33 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. 
 
பணம் பறிமுதல் செய்தது தொடர்பாக தலைமைத் ஆணையத்துக்கு வருமான வரித்துறையினர் அறிக்கை அனுப்பியுள்ளது.
 
இந்நிலையில் தற்போது அமமுக வேட்பாளருடைய வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.