புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 19 நவம்பர் 2018 (09:11 IST)

கஜா புயல்: உதவி செய்தவர்களுக்கு இளநீர் கொடுத்து நெகிழ செய்த விவசாயிகள்

சமீபத்தில் டெல்டா மாவட்டங்களை புரட்டி போட்டு கோரத்தாண்டவம் ஆடிய கஜா புயலால் பெரும் பொருட்சேதங்களும் ஒருசில உயிர்ச்சேதங்களும் நிகழ்ந்துள்ளன.

அண்டை மாநிலமான கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு உதவிய தமிழக மக்கள், அதேபோல் டெல்டா மாவட்ட பகுதிகளுக்கும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். தமிழகத்தின் பல பகுதியில் இருந்து உணவு உள்பட அத்தியாவசிய பொருட்களுடன் வேன் மற்றும் லாரிகள் சென்று கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் உதவிக்கரம் நீட்டிய மக்களுக்கு நன்றி சொல்லும் வகையில் உதவிப்பொருட்கள் கொண்டு வந்த லாரி மற்றும் வேன்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இளநீர்களை அவைத்து அனுப்பியுள்ளனர். உதவி செய்ய வந்தவர்களை வெறுமனே அனுப்ப  மனமில்லாமல் தாங்கள் துயரத்தில் இருந்தபோதிலும் டெல்டா மாவட்ட மக்களின் விருந்தோம்பல் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.