செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 19 நவம்பர் 2018 (08:58 IST)

கேரள வெள்ளத்திற்கும் கஜா புயலுக்கும் காரணம் இதுதான்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்

கேரளாவில் கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த கனமழை மற்றும் பெருவெள்ளத்திற்கும், தமிழகத்தில் சமீபத்தில் வீசிய கஜா புயலுக்கும் வானிலையே காரணம் என வானிலை ஆய்வு மையம் விஞ்ஞானபூர்வமாக அறிவித்துள்ள நிலையில் இந்த இரண்டிற்கும் காரணம் தெய்வக்குற்றமே என ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியபோது, 'சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்ற தீர்ப்பு விசித்திரமாகவும், உள்நோக்கம் கொண்டவையாகவும் உள்ளது. கலாச்சாரத்தை மீறிய இதுபோன்ற செயல்களால்தான் கேரளாவில் வெள்ளம் மற்றும் தமிழகத்தில் கஜா புயல் போன்ற பேரழிவிற்கு காரணம்.

இந்து கலாச்சாரத்தின்படி அனைத்து வயது பெண்களும் நடந்து கொண்டால் இதுபோன்ற எந்த பிரச்சனையும் வராது. இந்து கலாச்சாரத்தை காப்பாற்ற இந்துக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் குரல் கொடுக்க வேண்டிய நேரம் இது. இல்லையெனில் நாம் பலவிஷயங்களை இழக்க நேரிடும்' என்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் தெரிவித்துள்ளார்.