மாமியாரின் தலையைக் கடித்த மருமகள் ! பரபரப்பு சம்பவம் !
கோவை மாவட்டத்தில் குடும்ப சண்டையில் மாமியார் தலையை, மருமகள் கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாட்சி அருகேயுள்ள மின்நகர் என்ற பகுதியில் வசித்து வந்தவர் நாகேஸ்வரி(62). இவர் அப்பகுதியில் பத்திரிக்கை எழுத்தாளராக பணியாற்றி வருகிறார்.
இவரது மகன் சரவணக்குமார்(38). இவரது மனைவி கல்பனா. சரவணக்குமாருக்கு நிரந்தர வேலை இல்லாததால் தன் தாய்க்கு உதவியாக இருந்துள்ளார். அப்போது, அவர் கொடுக்கும் பணத்தை வைத்துக் கொண்டு மது அருந்தி வந்துள்ளார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன், மனைவி கல்பனாவுடன் ஏற்பட்ட சண்டையால் வீட்டை விட்டு வெளியேறிய சரவணக்குமார், தாய் வீட்டுக்கு சென்று வசித்துள்ளார். அவரை அழைத்துச் செல்ல கல்பனா இன்று மாமியார் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது, மாமியாருக்கும் கல்பனாவுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி சண்டையாகி ஏற்பட்டது. இதில் மாமியாரின் தலையை கல்பனா கடித்து வைத்தார்.
இதில், ரத்தம் வழிந்தபடி இருந்த நாகேஸ்வரியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு 6 தையல் போடப்பட்டது. பின்னர் கல்பனாவை போலீஸார் கைது செய்தனர். இந்த சமபவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.