1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 16 டிசம்பர் 2019 (15:02 IST)

அண்டர்கிரவுண்ட் வொர்க் ஓவர்... ரஜினியின் அரசியல் தர்பார் எப்போது?

ரஜினியின் தர்பார் பொங்கலுக்கு வெளியானது அவரின் அரசியல் தர்பார் அரங்கேறும் என தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
 
ரஜினி அரசியலுக்கு வரப்போகிறேன் என சொல்லி 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. அரசியலுக்கு வருவது  உறுதி சட்டமன்றத் தேர்தலில் போட்டி என அறிவித்து ஓராண்டுக்கும் மேல் ஆகிவிட்டது. ஆனால் இன்னமும் அரசியலில் இறங்கவும் இல்லை, கட்சியும் ஆரம்பிக்கவில்லை. 
 
இந்நிலையில், ரஜினியின் நீண்டகால நண்பரான தமிழருவி மணியன் ரஜினியின் அரசியல் வருகை குறித்து எப்போதும் பேசி வருகிறார். சமீபத்தில் அவர் பேசியதாவது, அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தர்பார் படம் வெளிவந்த பிறகு ரஜினிகாந்த் அரசியல் தர்பார் அரங்கேறும். ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற பேச்சுக்கு இனி இடமில்லை. 
எந்த நேரத்தில் அரசியல் கட்சி துவங்குவது. எந்த இடத்தில் மாநாடு நடத்துவது, எப்போது மக்களை சந்திப்பது, தேர்தல் அறிக்கையை எந்த வடிவத்தில் மக்களுக்கு வழங்குவது, தேர்தல் அறிக்கயில் எதுவெல்லாம் சொல்லப்பட வேண்டும் என்பது குறித்து தெளிவான சிந்தனைகளோடு ரஜினிகாந்த் திட்டமிட்டு அனைத்தையும் உருவாக்கியுள்ளார். உரிய நேரத்தில் ஊடங்களை அழைத்து ஒவ்வொன்றாக வெளிப்படுத்துவார் என தெரிவித்துள்ளார். 
 
இதற்கு முன்னர் ஆட்சி என்று முடிவு வருகிறதோ அன்று தான் ரஜினி அரசியலுக்கு வருவார். அல்லாமல் திமுக - அதிமுக கட்சிகளோடு கூட்டணி வைக்க வேண்டுமென்றால் ரஜினி அரசியலுக்கே வரமாட்டார் எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.