செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj kiyan
Last Modified: சனி, 14 டிசம்பர் 2019 (18:57 IST)

நாளை மறுநாள் வெளியாகிறது தர்பார் டிரைலர் ! ஏ.ஆர். முருகதாஸ் டுவீட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் பிரமாண்டமாக நடந்தது.
இப்படத்தில் அனிருத்தின் பாடல்கள் மற்றும் இசை  எல்லோராலும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் இப்படத்தில் டிரைலர் நாளை வெளியாகும் என இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது :
 
ஹலொ நண்பர்களே, ஆக்சன் களத்துக்கான டிரைலர் தயார்...வரும் 16 ஆம் தேதி மாலை (அதாவது நாளை மறுநாள்)  6;30 மணிக்கு தர்பார் டிரைலர் ரிலீசாகும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்... மகிழுங்கள் என தெரிவித்துள்ளார். 
 
இந்த டுவிட்டுக்கு நெட்டிசன்கள் மற்றும் ரஜினி ரசிகர்கள் லைக்குகள் போட்டு வைரல் ஆக்கிவருகின்றனர்.