செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 4 மார்ச் 2021 (20:39 IST)

கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி: கூட்டாக ஆலோசனை செய்யும் கம்யூனிஸ்ட் கட்சிகள்!

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள எந்த ஒரு பெரிய கட்சியும் இன்னும் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை முடிக்கவில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் மட்டுமே தங்களுக்குரிய தொகுதிகளை உறுதி செய்துள்ளன
 
இன்னும் காங்கிரஸ் மதிமுக மற்றும் இடது கம்யூனிஸ்ட், வலது கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. திமுக பிடிவாதமாக இந்த முறை 180 தொகுதிகளில் போட்டியிட வேண்டுமென திட்டமிட்டு உள்ளதால் அனைத்து கட்சிகளுக்கும் குறைவான தொகுதிகளை ஒதுக்க முடிவு செய்து உள்ளது
 
இதனால் சிபிஐ சிபிஎம் ஆகிய இரு கட்சிகளும் அதிர்ச்சி அடைந்து கட்சியின் நிர்வாகிகளும் தற்போது கூட்டாக ஆலோசனை செய்து வருகின்றனர். இந்த ஆலோசனைக்கு பின்னர் அவர்கள் அதிரடி முடிவை எடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்