வியாழன், 18 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 16 மே 2025 (16:52 IST)

10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய இரட்டை சகோதரிகளுக்கு ஒரே மதிப்பெண்கள்.. ஆச்சரிய தகவல்..!

10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய இரட்டை சகோதரிகளுக்கு ஒரே மதிப்பெண்கள்.. ஆச்சரிய தகவல்..!
கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த கூலி வேலைக்கு செல்லும் ஒருவரின் இரட்டை மகள்கள் கனிகா மற்றும் கவிதா, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் ஒரே மதிப்பெண் பெற்றுள்ளனர்.
 
2025ம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு தேர்வில், இவர்கள் தலா 474 மதிப்பெண்கள் பெற்று, தங்களது பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.  
 
இருவரும்  தமிழில் 95, 96, ஆங்கிலத்தில் 97, 98, கணிதத்தில் இருவரும் 94, அறிவியலில் 89, 92 மற்றும் சமூக அறிவியலில் 95, 98 என அனைத்து பாடங்களிலும் உயர் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
 
பின்னணியில் மிகவும் சாதாரண குடும்பத்தை சேர்ந்த இவர்கள், பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருந்தாலும், இருவரும் விடாமுயற்சி கைவிடாமல், மிகச் சிறந்த முன்மாதிரியாக திகழ்கிறார்கள்.
 
இந்த இரட்டையர்கள் சாதித்த வெற்றி, பல பள்ளி மாணவர்களுக்கு  ஊக்கமும் நம்பிக்கையும் தரக்கூடிய ஒன்று. பள்ளி ஆசிரியர்களும், கிராம மக்களும் இந்த சாதனையை பாராட்டி வருகிறார்கள். பெற்றோர்களும் உறவினர்களும் மகிழ்ச்சியில் குளிக்கின்றனர்.
 
Edited by Mahendran