22 வாங்கிக்கோங்க.. இல்ல 27வது வேணும்! – இழுபறியில் திமுக – காங்கிரஸ் கூட்டணி

INC DMK
Prasanth Karthick| Last Modified வியாழன், 4 மார்ச் 2021 (16:41 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் கூட்டணி தொகுதி பங்கீட்டில் காங்கிரஸ் – திமுக இடையே இழுபறி நீடித்து வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக தனது தோழமை கட்சிகளுடன் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மற்ற கட்சிகளுடன் ஓரளவு சுமூகமாக தொகுதி பங்கீடு முடிந்த நிலையில் தேசிய கட்சியான காங்கிரஸுடன் இழுபறி நீடித்து வருகிறது.

காங்கிரஸ் 31 தொகுதிகள் எதிர்பார்த்த நிலையில் திமுக 20 தருவதற்கு பேசியதாக தெரிகிறது. இதனால் முதற்கட்ட கூட்டத்தில் உடன்பாடு ஏற்படாத நிலையில் காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்நிலையில் தற்போது மீண்டும் நடந்த தொகுதி பங்கீடு கூட்டத்தில் காங்கிரஸ் இறங்கி வந்து 27 கேட்டதாகவும், ஆனால் திமுக 20லிருந்து 22 ஆக தொகுதியை உயர்த்தியுள்ளதாகவும் பேசிக் கொள்ளப்படுகிறது.

தொடரும் பேச்சுவார்த்தையில் காங்கிரஸுக்கு தொகுதி 22லிருந்து 27க்குள் பேசி முடிவாகும் என அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :