வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 10 ஆகஸ்ட் 2019 (10:16 IST)

கால்டாக்ஸி டிரைவரோடு சேர்ந்து கணவனைக் கொலை செய்த மனைவி – இரட்டை ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம் !

தொழிலதிபரை கள்ளக்காதலனோடு சேர்ந்து கொலை செய்த மனைவிக்கு நீதிமன்றம் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.

சென்னை, ஈக்காட்டுத்தாங்கலைச் சேர்ந்தவர் உதயபாலன் எனும் தொழிலதிபர் வசித்து வந்தார். இவருக்கு உதயகீதா எனும் மனைவியும் மூன்று பெண் குழந்தைகளும் உள்ளனர். தொழில் விஷயமாக உதயபாலன் அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவதால் உதயகீதாவுக்கு கால் டாக்ஸி மூலம் வெளியிடங்களுக்கு சென்று வந்துள்ளார். அப்போது பிரபாகரன் எனும் டிரைவரோடு அவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. பிரபாகரனுக்கு தேவைப்படும் போதெல்லாம் அவர் காசு கொடுத்து உதவி செய்துள்ளார்.

இதனையறிந்த உதயபாலன் தனது மனைவியைக் கண்டித்து சண்டையிட்டுள்ளார். கள்ளக்காதல் விஷயம் கணவருக்குத் தெரிந்துவிட்டத்தை தனது காதலனிடம் சொல்லியுள்ளார் கீதா. அதனால் உதயபாலனைக் கொல்லும் திட்டத்தைக் கூறியுள்ளார் பிரபாகரன். இதைக் கேட்டு முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் பின்னர் திட்டத்துக்கு ஒத்துக்கொண்டுள்ளார் கீதா. இதையடுத்து திட்டமிட்டப்படி கொலை நடந்த அன்று தனது குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். இதையடுத்து வீட்டில் தனியாக இருந்த உதயபாலனை பிரபாகரன் தனது கூட்டாளிகளோடு வந்து கொலை செய்துள்ளார். பணத்துக்காக நடந்த கொலை என்பது போல் காட்ட வீட்டில் இருந்து 30,000 ரூபாய் பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.

இது சம்மந்தமான போலிஸ் விசாரணையில் உதயகீதாவின் பதில் முன்னுக்குப் பின் முரணான பதில்களை சொல்ல போலிஸ் அவரை தீவிர விசாரணையாக்கு உட்படுத்தியபோது அவர் கொலை செய்ததை ஒத்துக் கொண்டுள்ளார். அதையடுத்து இரண்டு ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் உதயகீதாவுக்கு நீதிமன்றம் இரட்டை ஆயுள்தண்டனை வழங்கியுள்ளது.