1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 9 ஆகஸ்ட் 2019 (12:04 IST)

பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை – கொலையில் முடிந்த தகராறு !

விருதுநகர் அருகே பக்கத்து வீட்டுக்காரர்களுக்குள் நடந்த பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் அங்காள பரமேஸ்வரி என்ற பெண் கொலை செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கஞ்சம்பட்டியில் வசித்து வருபவர்கள் திருமுருகன் -அங்காள பரமேஸ்வரி தம்பதியினர். அங்காள பரமேஸ்வரி அவர்களின் பக்கத்து வீட்டுக்காரரான அடைக்கலம் என்பவரோடு பணப் பரிமாற்றம் இருந்து வந்துள்ளது. இதனால் அவர்கள் இருவருக்குள் பிரச்சனை எழுந்துள்ளது.

இதையடுத்து நேற்றிரவு அடைக்கலத்தின் வீட்டுக்கு சென்ற அங்காள பரமேஸ்வரி அடைக்கலத்தோடு வாக்குவாததில் ஈடுபட்டுள்ளார். ஒருக்கட்டத்தில் வாக்குவாதம் முற்ற அங்காளப் பரமேஸ்வரியைத் தாக்கியுள்ளார் அடைக்கலம். அந்த இடத்திலேயே அங்காள பரமேஸ்வரி உயிரிழந்தார்.  அங்காள பரமேஸ்வரியின் உடலை யாரும் இல்லாத நேரம் பார்த்து, அவரது வீட்டிலேயே எடுத்துச் சென்று போட்டுள்ளார் அடைக்கலம்.

திருமுருகன் வேலை முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது அவரது மனைவி மூச்சு பேச்சற்று கிடந்ததை பார்த்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்காள பரமேஸ்வரியின் உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இதையடுத்து இந்த மர்ம மரணம் குறித்து போலிஸ் நடத்திய விசாரணையில் அடைக்கலம் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  அதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.