செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 7 ஆகஸ்ட் 2019 (10:36 IST)

மாடல் தொழிலால் குடும்பத்தில் விரிசல் – மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு !

பெங்களூரில் தன்னுடைய மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் கோபித்துக்கொண்டு தனிமையில் விட்டுச் சென்றதால் மனைவி குழந்தையோடுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூவிரில் வசித்து வருகிறார் ஜோதி என்ற பெண். இவர்  மாடல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கும் பங்கஜ் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருமனம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஷபுனா என்ற 7 வயது மகள் உள்ளார். ஜோதி மாடல் தொழில் ஈடுபடுவது பங்கஜுக்கு பிடிக்காத காரணத்தால் தம்பதிகளுக்குள் அடிக்கடி சண்டை வந்துள்ளது. மனைவியின் நடத்தை  மேல் சந்தேகம் கொண்ட பங்கஜ் அவரிடம் அடிக்கடி சண்டையில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் வழக்கம் போல அவர்களுக்குள் சண்டை வரவே கோபித்துக்கொண்ட பங்கஜ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். மறுநாள் காலையும் அவர் வீடு திரும்பாததால் பயந்துபோன ஜோதி அவருக்குக் கால் செய்துள்ளார். ஆனால் அவர் போன் அனைத்து வைக்கப்பட்டு இருந்திருக்கிறது. இதனால் விரக்தியடைந்த ஜோதி அபார்ட்மெண்ட் மொட்டை மாடியில் இருந்து குழந்தையோடு குதித்துத் தற்கொலை செய்துள்ளார்.

இதைப் பார்த்த அபார்ட்மெண்ட் காவலாளில் போலிஸுக்குத் தகவல் சொல்ல சம்பவ இடத்துக்கு வந்த போலிஸார் இது சம்மந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.