கொரோனா தாக்கத்திற்கு ஆளான பள்ளிகளின் எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

Sugapriya Prakash| Last Modified சனி, 27 மார்ச் 2021 (08:04 IST)
தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

 
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மாணவர்கள் அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் தற்போது ஆடுதுறை, கும்பகோணத்தில் மேலும் 2 பள்ளிகளில் 13 மாணவர்கள், ஒரு ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தாக்கத்திற்கு ஆளான பள்ளிகளின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :