தஞ்சையில் மேலும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா! – 200 ஐ தாண்டிய பாதிப்பு!

Corona virus
Prasanth Karthick| Last Modified வெள்ளி, 26 மார்ச் 2021 (08:36 IST)
சமீப காலமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தற்போது மேலும் 4 பாதிப்புகள் உறுதியாகியுள்ளது.

கொரோனா ஊரடங்கு தளர்வுகளின்படி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2 வாரங்களில் 200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் தற்போது தஞ்சை மற்றும் கும்பகோணத்தை சேர்ந்த 3 ஆசிரியர்கள் மற்றும் ஒரு மாணவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. நேற்று வரை 225 ஆசிரியர்கள், மாணவர்கள் கொரோனா பாதிப்புக்கு உள்ளான நிலையில் அதில் 120 பேர் குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :