வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 26 மார்ச் 2021 (09:45 IST)

கொரோனா தடுப்பூசி போட்ட பின் என்ன செய்யக்கூடாது...?

கொரோனா தடுப்பூசி போன்ற எந்த தடுப்பூசி எடுத்துக் கொண்டாலும் 72 மணி நேரத்திற்கு மது அருந்தாமல் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தல். 

 
கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. 
 
முன்னதாக 20 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த 24 மணி நேரத்தில் 59,118 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 1,18,46,652 ஆக உயர்ந்துள்ளது. எனவே, தடுப்பூசி போடும் பணிகள் முன்னெடுத்தப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில், கொரோனா தடுப்பூசி போன்ற எந்த தடுப்பூசி எடுத்துக் கொண்டாலும் 72 மணி நேரத்திற்கு மது அருந்தாமல் இருக்க வேண்டும். மது தடுப்பூசியின் வீரியத்தை குறைத்துவிடும் என்பதால், தடுப்பூசி எடுத்துக் கொண்ட 72 மணி நேரத்திற்கு மது அருந்தக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதேபோல உடலை வருத்தும் கடுமையான பணிகளை 24 மணி நேரத்திற்கு செய்யக் கூடாது எனவும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் அறிவுறுத்தியுள்ளார்.