வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 27 ஜூன் 2021 (11:56 IST)

12 மருத்துவமனைகளில் கொரொனா சிகிச்சை அனுமதி ரத்து !

தமிழகத்தில் 12 மருத்துவமனைகளின் கொரொனா சிகிச்சைக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.டி,ஆர் .பழனிவேல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வந்த நிலையில்  இரண்டு வாரங்களாகக் குறைந்து வருகிறது.

அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், அனைத்து மாநிலங்களிலும்  45  வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் கூறியபடி 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  தமிழகத்தில் 12 மருத்துவமனைகளின் கொரொனா சிகிச்சைக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பி.டி,ஆர் .பழனிவேல் கூறியுள்ளதாவது:

மதுவரை மாவட்டட்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 12 நோயாளிகள் அதிகக் கட்டணம் செலுத்தியதாகப் புகார் தெரிவித்த நிலையில் அவருடைய பணம் மீண்டும் பெற்று அவரிடமே ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.