ராஜீவ் படுகொலை போன்று இன்னொரு படுகொலையா? எச்.ராஜா ஆவேசம்
நெல்லை கண்ணன் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு எதிராக அவதூறாக பேசியதாக வழக்கு பதிவு செய்துள்ளதாக ஊடகங்களில் செய்தி. கண்ணன் பேசியுள்ளது அவதூறு பேச்சல்ல. கொலைக்கு தூண்டுதல் (சோலிய முடி). ராஜிவ்காந்தி படுகொலை போன்ற சம்பவத்தை மீண்டும் தமிழகத்தில் நடத்த திட்டமிடுவதாகவே தெரிகிறது’ என எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சமீபத்தில் நடைபெற்ற முஸ்லீம் அமைப்பு ஒன்றின் கூட்டத்தில் கலந்து கொண்ட நெல்லை கண்ணன், அமித்ஷா மற்றும் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு பாஜகவினர் பொங்கி எழுந்துள்ளனர்.
இந்த நிலையில் ராஜீவ் கொலை போன்றே இன்னொரு கொலையை தமிழகத்தில் செய்ய திட்டமிட்டுள்ளதாக எச்.ராஜா தனது டுவிட்டரில் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இன்று இரவுக்குள் நெல்லை கண்ணனை கைது செய்யாவிட்டால் நாளை சென்னை மெரீனாவில் போராட்டம் நடத்தப்படும் என்று எச்.ராஜா ஏற்கனவே அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது