வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 31 டிசம்பர் 2019 (18:36 IST)

நெல்லை கண்ணனை கைது செய்யவில்லை என்றால்..? ஹெச்.ராஜா எச்சரிக்கை

இன்று இரவுக்குள் நெல்லை கண்ணன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனில் நாளை மாலை 3 மணிக்கு மெரினாவில் போராட்டம் நடத்தப்படும் என்றும், போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தாலும்,  தடையை மீறி போராட்டம் நடைபெறும் என்றும் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நெல்லை கண்ணன், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனையடுத்து நெல்லை கண்ணன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகத்தில் உள்ள பல காவல்துறை அலுவலகங்களில் புகார்கள் செய்யப்பட்டன
 
தமிழக பாஜக சார்பில் இதுகுறித்து தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் அவர்களிடமும் புகார் செய்யபப்ட்டது. இந்த நிலையில் நெல்லை கண்ணன் விரைவில் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது