திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 31 டிசம்பர் 2019 (08:31 IST)

பிரதமரை கொல்ல காங்கிரஸ் சதி செய்கிறதா? – எச்.ராஜா சந்தேகம்!

பிரதமர் மோடியை கொல்ல வேண்டும் என நெல்லை கண்ணன் பேசியது குறித்து காங்கிரஸ் மேல் சந்தேகம் இருப்பதாக எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

நெல்லை கண்ணன் இஸ்லாம் அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் மோடி மற்றும் அமித்ஷாவை கொலை செய்ய வேண்டும் என்று பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த கூட்டத்தில் தமிழர் வாழ்வுரிமை தலைவர் வேல்முருகன், எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி உள்பட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் நெல்லை கண்ணனை கைது செய்ய காவல் நிலையத்தில் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ”பாரத பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் கொலை செய்ய வேண்டும் என பேசுமளவுக்கு நெல்லை கண்ணனுக்கு துணிச்சல் எப்படி வந்தது. இது நெல்லை கண்ணனின் கருத்து மட்டுமா அல்லது காங்கிரஸே பிரதமரை கொல்ல சதி செய்கிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு உடனடியாக நெல்லை கண்ணனை கைது செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்த விளக்கம் ஏதும் அளிக்காமல் நெல்லை கண்ணன் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.