1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 31 டிசம்பர் 2019 (11:56 IST)

ஆன்லைன் பரிவர்த்தனையில் இல்லாத நிறுவனங்களுக்கு அபராதம்! – மத்திய அரசு எச்சரிக்கை!

ஆன்லைனில் யூபிஐ வசதில் பணம் செலுத்தும் வசதியை செய்யாத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் பண பரிவர்த்தனையை அதிகரிப்பதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பணமதிப்பிழப்புக்கு பிறகு டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் பழக்கம் மக்களிடையே அதிகரித்திருக்கிறது. யூபிஐ வசதியை பயன்படுத்தி ஃபோன்பே, கூகிள் பே போன்ற செயலிகள் மூலம் பலர் பணம் செலுத்தி வருகின்றனர்.

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு வாடிக்கையாளர்களை கவர யூபிஐ வசதியை உணவகங்கள் முதல் பெரும் நிறுவனங்கள் வரை யூபிஐ, ரூபே வசதியை பயன்படுத்தி வருகின்றன. ஆனால் சில நிறுவனங்கள் இன்னமும் நேரடி பணம் செலுத்தும் முறையை வழக்கத்தில் வைத்துள்ளன.

மத்திய அரசின் அறிவிப்பின்படி 50 கோடி அல்லது அதற்கு மேல் வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் பண பரிவர்த்தனை வசதியை அளிக்க வேண்டும். இந்த வசதியை அளிக்காமல் நேரடி பணப்பரிவர்த்தனை மட்டும் செய்யும் நிறுவனங்களுக்கு நாளொன்றுக்கு 5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.