புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva

ராஜீவ் காந்தி கொலையாளிகள் விடுதலை: மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய காங்கிரஸ் கட்சி

Congress
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கிய ஏழு தமிழர்கள் சமீபத்தில் விடுதலை செய்யப்பட்ட நிலையில் இந்த விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியை மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கிய ஏழு தமிழர்களில் ஒருவரான பேரறிவாளன் கடந்த சில மாதங்களுக்கு முன் விடுதலை செய்யப்பட்டார். 
 
அதன்பின்னர் முருகன், நளினி உள்பட 6 பேர் சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டனர். இந்த விடுதலையை திமுக உள்பட பல கட்சிகள் வரவேற்றுள்ள நிலையில் திமுக கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான காங்கிரஸ் கூட்டணி விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது
 
இந்த நிலையில் ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்த உத்தரவை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய இருப்பதாக காங்கிரஸ் கட்சியை தகவல் தெரிவித்துள்ளது. இதனால் திமுக காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்படும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva