வி.டி. சாவர்கரை விமர்சித்த ராகுல்காந்தி மீது போலீஸார் வழக்குப் பதிவு
சாவர்கரை விமர்சித்த காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் தேச ஒற்றுமை என்ற பெயரில் நடைப்பயணம் சென்று வருகிறார்.
இந்தப் பயணத்தில், தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மா நிலங்களைக் கடந்து, தற்போது, மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபயணத்தை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், வி.டி. சாவர்கள் பிரிட்டிஷ் அரசுக்கு மன்னிப்புக் கடிதத்தில், கீழ்படிந்த வேலைக்காரனாக இருப்பேன் என்று எழுதியதாக காங்கிரஸ் எம்.பி கூறியிருந்தார்.
இந்த நிலையில், மகாராஷ்டிர மாநில முதல்வர் ஏக் நாத் ஷிண்டே இந்த விமர்சனத்தை மகாராஷ்டிர மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள் என்று கூறயதை அடுத்து, ராகுல்காந்தி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
இது காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Sinoj