செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 1 ஜூன் 2024 (08:22 IST)

சிலிண்டர் விலை இன்று முதல் குறைவு.. வழக்கம்போல் குடும்ப தலைவிகள் அதிருப்தி..!

gas cylinder
ஒவ்வொரு மாதமும் முதல் தேதி சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படும் என்ற நிலையில் சற்று முன் எண்ணெய் நிறுவனங்கள் இந்த மாதத்திற்கான சிலிண்டர் விலை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன. 
 
இதில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை குறைந்துள்ளதாகவும் வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை என்றும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இந்த அறிவிப்பின்படி வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை சென்னையில் ரூ.70.50 குறைந்துள்ளது. இதனை அடுத்து சென்னையில் வணிக சிலிண்டர் தற்போது ரூபாய் 1840.50 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது. 
 
ஆனால் அதே நேரத்தில் வீட்டு சிலிண்டர் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்பதால் ரூ.818.50 என்ற அளவில் தான் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டு சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லாததால் குடும்பத் தலைவிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். 
 
Edited by Mahendran