1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. CNG Crisis in Chennai: Auto Rickshaws Stranded as Supply Hits Rock Bottom

ஓட்டல்கள் மூடியது மட்டுமல்ல, இனி ஆட்டோவும் ஓடாதா? கேஸை நம்பி இருக்கும் ஆட்டோக்களுக்கு சிக்கல்..

சென்னை
சென்னையில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் சிஎன்ஜி தட்டுப்பாடு, ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை நிலைகுலைய செய்துள்ளது. 
 
ஏற்கனவே சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் சில உணவகங்கள் மூடப்பட்ட நிலையில், தற்போது இயற்கை எரிவாயு கிடைக்காததால் ஆட்டோக்களும் ஓடாத சூழல் உருவாகியுள்ளது. 
 
குறிப்பாக, அடையாறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மூன்று பெட்ரோல் பங்குகளில் சிஎன்ஜி விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒரே ஒரு பங்கில் மட்டுமே எரிவாயு விநியோகிக்கப்படுகிறது.
 
இதன் காரணமாக, அதிகாலை 3 மணி முதலே ஆட்டோ ஓட்டுநர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. பல மணிநேரம் காத்திருந்தும் எரிவாயு கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பும் ஆட்டோக்களால், பொதுமக்களின் போக்குவரத்தும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
 
பெட்ரோல் விலையேற்றத்தால் சிஎன்ஜி முறைக்கு மாறிய தங்களுக்கு, இப்போது தட்டுப்பாடு என்ற பெயரில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஓட்டுநர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த எரிவாயு தட்டுப்பாடு நீடித்தால், சென்னையில் ஆட்டோ சேவை முழுமையாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அரசு உடனடியாக தலையிட்டு விநியோகத்தை சீர்செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
ஹார்முஸ் நீரிணை பகுதியில் கண்ணிவெடி வைக்க முயற்சித்த ஈரான்.. 16 கப்பல்களை அடித்து நொறுக்கிய அமெரிக்கா..!