ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 27 டிசம்பர் 2022 (12:46 IST)

பொங்கல் தொகுப்பில் கரும்பு உண்டா? – அமைச்சர் சொன்ன ஸ்வீட் தகவல்!

தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்கப்படுமா என்பது குறித்து கூட்டுறவு துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது தமிழ்நாடு அரசு சார்பில் ரேசன் கடைகள் மூலமாக பொங்கல் பொருட்கள் மற்றும் பணம் வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது. கடந்த ஆண்டு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.

ஆனால் அதில் நிறைய விமர்சனங்கள் எழுந்ததால் இந்த முறை இலவச அரிசி, சர்க்கரையுடன் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்கப்படாதது குறித்து எதிர்கட்சிகள் உள்ளிட்ட பலரும் விமர்சித்துள்ளனர். கரும்பு கொள்முதல் செய்ய விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் “கடந்த காலங்களில் வழங்கப்பட்ட பொங்கல் பை குறித்து குறைகள் சுட்டிக்காட்டப்பட்டன. அதன் அடிப்படையில் தவறுகளை தவிர்க்கும் விதமாக கரும்பு கொள்முதல் செய்யப்படவில்லை. ஆனால் தற்போது தோழமை கட்சிகளும், எதிர்கட்சிகளும் கரும்பு வழங்க வலியுறுத்தி வருகின்றன. பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்கலாமா என்பது குறித்து முதலமைச்சர் ஆலோசித்து வருகிறார். விரைவில் இதுகுறித்த முடிவை அவர் அறிவிப்பார்” என கூறியுள்ளார்.

Edit by Prasanth.K