செவ்வாய், 1 ஏப்ரல் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 27 மார்ச் 2025 (11:13 IST)

வக்ஃப் மசோதாவுக்கு எதிராக தீர்மானம்.. சட்டசபையில் தாக்கல் செய்த முதல்வர் ஸ்டாலின்!

Stalin Assembly
தமிழக சட்டப்பேரவையில், வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்புத் தீர்மானம் முன்வைத்துள்ளார். 
 
நாடு முழுவதும் வக்ஃப் சொத்துகளுக்கான ஒழுங்குமுறைப்படுத்தலை நோக்கமாக கொண்ட இந்த திருத்த மசோதா, கடந்த ஆகஸ்டில் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
 
எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால், மசோதாவை பரிசீலிக்க நாடாளுமன்ற நிலைக் குழு அமைக்கப்பட்டது. அதன் பேரில் 655 பக்கங்களைக் கொண்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. 
 
இதிலிருந்து சில மாற்றங்களுக்கு மத்திய அமைச்சரவை சம்மதம் தெரிவித்துள்ளது. தற்போதைய பட்ஜெட் கூட்டத் தொடரின் போது இந்த மசோதா தாக்கலாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த சூழலில், தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் கூட்டத்தொடரில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வக்ஃப் மசோதாவுக்கு எதிராக தனித் தீர்மானம் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அவரை தொடர்ந்து, சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்துவார்கள். பின்னர், வாக்கெடுப்பு நடத்தப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படும்.
 
Edited by Mahendran