வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 22 ஏப்ரல் 2024 (08:38 IST)

சித்ரா பவுர்ணமி தினத்தில் கிரிவலம்.. திருவண்ணாமலைக்கு 1,820 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Girivalam
நாளை சித்ரா பௌர்ணமி கொண்டாட இருப்பதை அடுத்து திருவண்ணாமலையில் அதிக பக்தர்கள் கிரிவலத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. 
 
திருவண்ணாமலையில் ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்று ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வருவார்கள் என்பதும் இதனால் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் நாளை சித்ரா பௌர்ணமி என்பதால் கூடுதல் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1820 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. 
 
மேலும் திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமியை ஒட்டி பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்படும் என்றும் கூடுதல் காவல் துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. 
 
சித்ரா பௌர்ணமி தினம் என்பதால் திருவண்ணாமலைக்கு இன்றும் நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை தெரிவித்துள்ள நிலையில் அந்த பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு பக்தர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. 
 
Edited by Siva