தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் பில்.. அமைச்சர் செந்தில் பாலாஜி தீவிரம்..!
தமிழக முழுவதும் டாஸ்மாக் மது கடைகளில் மதுபானங்கள் வாங்குவதற்கு இனி பில் வழங்கப்படும் என்றும், அதற்கான முயற்சியை தீவிரமாக அமைச்சர் செந்தில் பாலாஜி எடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
டாஸ்மாக் மது கடைகளில் கூடுதலாக மது பாட்டில்களுக்கு பணம் வாங்குவதாக புகார் எழுந்துள்ள நிலையில், டாஸ்மாக் கடைகளில் பில் வழங்க வேண்டும் என்றும் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என்றும் திட்டமிடப்பட்டது.
இதற்காக அரக்கோணம், ராமநாதபுரம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பில் வழங்கும் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் கண்டுபிடிக்கப்பட்ட குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்டமாக இந்த இரண்டு மாவட்டங்களில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் அடுத்த வாரம் முதல் முழுமையாக டிஜிட்டல் திட்டம் அமல்படுத்தப்பட்டு ஒவ்வொரு மது பாட்டிலுக்கும் பில் வழங்கப்படும் என்று தகவல் தெரிவிக்கின்றன.
கணினி மயமாக்குவதன் மூலம் மதுபான உற்பத்தி, விற்பனை, இருப்பு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படும் என்றும், கூடுதல் விலைக்கு மது விற்பது இதன்மூலம் தடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழக முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, அனைத்து மது வாங்கும் வாடிக்கையாளர்களுக்கும் பில் வழங்கப்படும் என்றும், இந்த திட்டத்தை விரைவில் செயல்படுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி தீவிரமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
Edited by Mahendran