ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 1 ஏப்ரல் 2024 (14:51 IST)

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு பெயர் சூட்டியதா சீனா

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள மேலும் 30 இடங்களுக்கு புதிய பெயரை சீனா சூட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
கிழக்கு அருணாச்சலில் உள்ள பகுதியை தங்களது ஆளுகைக்கு உட்பட்ட "ஸங்னங்" பகுதி என பெயரிட்டு அழைக்கும் சீனா, அங்குள்ள 11 மாவட்டங்கள், 12 மலைகள், 4 ஆறுகள், 1 ஏரி, 1 நிலப்பகுதி உள்ளிட்ட 30 இடங்களுக்கு புதிய பெயர் சீனா சூட்டியுள்ளது.
 
மேலும் ஏற்கனவே 2017, 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் அருணாச்சலில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு புதிய பெயர்களை சீனா சூட்டியதாகவும், தற்போது 4வது முறையாக அருணாச்சல பிரதேச பகுதிகளுக்கு, புதிய பெயர்களை சீனா சூட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பகுதிகளுக்கு சீனா புதிய பெயர்களை சூட்டி வருவதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் தேர்தலுக்கு பயன்படுத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியூள்ளது.
 
Edited by Mahendran