திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: சனி, 30 மார்ச் 2024 (20:38 IST)

பாஜக ஆளும் மாநிலங்களில்தான் போதைப்பொருள் அதிகம்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

stalin
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல்  ஒரே கட்டமாக நடக்கிறது. இதையொட்டி திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்த நிலையில், இந்தியா கூட்டணியில் திமுக இணைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் அக்கட்சியின் தலைமையில் கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. சமீபத்தில் வேட்பாளர் பட்டியல் வெளியாகி, வேட்பு மானுதாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த நிலையில், இன்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்,  சேலம்- கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
 
அப்போது அவர் பேசியதாவது: 
 
’’பாஜக ஆளும் மாநிலங்களில்தான் போதைப்பொருள் அதிகமாக உள்ளது. ஒட்டுமொத்தமாக குஜராத் வழியாகத்தான் போதைப்பொருள் வருவதாக செய்திகள் வெளியாகின்றன. நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு முன்வைத்த புள்ளி விவகரங்களிலேயே பாஜக ஆளும் மாநிலங்களிதான் போதைப் பொருள் அதிகமாக உள்ளது’’ என்று தெரிவித்தார்.
 
மேலும் ’’ஒரு மாநில அரசு எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு நாம் தான். ஒன்றிய அர்சு எப்படிச் செயல்படக் கூடாது என்பதற்கு பாஜகதான் எடுத்துக்கட்டு, மற்ற மா நிலங்களுக்கு மட்டுமல்ல., நாட்டிற்கே முன்னோடியாகத் திகழ்கிறது தமிழ்நாடு.  திமுக 3 ஆண்டுகளாக நடத்தி வரும் நல்லாட்சியே தமிழ்நாட்டில் உண்மையாக நடக்கும் மக்களாட்சி’’ என்று  தெரிவித்தார்.