ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 27 நவம்பர் 2022 (10:56 IST)

சென்னையில் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட விநாயகர் கோவில்.. பக்தர்கள் அதிர்ச்சி

vinaygar temple
சென்னையில் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட விநாயகர் கோவில்.. பக்தர்கள் அதிர்ச்சி
சென்னை தண்டையார்பேட்டையில் விநாயகர் கோவில் ஒன்று இடித்து தரைமட்டமாக்கப்பட்ட சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
சென்னை தண்டையார்பேட்டையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட விநாயகர் கோவில் மாநகராட்சி இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது என்றும் அந்த கோவிலை இடிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 
 
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அந்த கோயிலை இடிக்க உத்தரவிட்டது. இதனையடுத்து சென்னை மாநகராட்சி இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக கூறப்பட்ட சுந்தர விநாயகர் கோவிலில் ஜேசிபி எந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது
 
இதனை அடுத்து பலத்த பாதுகாப்புடன் கோவிலை இடிக்கும் பணி நடைபெற்றபோது பக்தர்கள் அதிர்ச்சியுடன் அதனை பார்த்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva