1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Rain in chennai next two days says meteorological center

சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு

rain
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இலேசான மழை முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
வடகிழக்கு பருவமழை மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
 
இந்த நிலையில் சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவம்பர் 30-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
பேருந்து நிறுத்தத்தின் பெயர் ஒலிபரப்பு திட்டம்: இன்று முதல் தொடக்கம்