வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : சனி, 26 நவம்பர் 2022 (13:52 IST)

பேருந்து நிறுத்தத்தின் பெயர் ஒலிபரப்பு திட்டம்: இன்று முதல் தொடக்கம்

Chennai Bus
பேருந்துகளில் பயணம் செய்யும் போது அடுத்தடுத்த பேருந்து நிறுத்தங்களில் பெயர்களை ஒலிபரப்பும் திட்டம் இன்று முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக தமிழக அரசின் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
 
முதல்கட்டமாக இந்த திட்டம் சென்னை மாநகர பேருந்துகளில் அமல்படுத்த உள்ளதாகவும் சென்னை மாநகர பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் அடுத்த பேருந்து நிறுத்தங்களில் பெயரை ஒலிபெருக்கி மூலம் இனி கேட்கலாம் என்றும் இந்த திட்டம் இன்று அதாவது நவம்பர்  26 முதல் தொடங்க படுவதாகவும் அறிவித்துள்ளது 
 
பேருந்து நிறுத்தங்கள் அடைவதற்கு 300 மீட்டர் தூரத்திலேயே பேருந்து நிறுத்தத்தின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒலிபரப்பப்படும் என்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது
 
இதன் காரணமாக முதல் முறையாக சென்னை பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் மிகவும் பயன் அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran