1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 26 நவம்பர் 2022 (11:46 IST)

சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை திறக்கும் தேதி அறிவிப்பு

marina
சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை திறக்கும் தேதி அறிவிப்பு
சென்னை மெரினாவில் கடந்த சில நாட்களாக மாற்றுத்திறனாளிகளுக்கான பாதை அமைக்கப்பட்டு வந்தது என்பதும் இந்த பாதைக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதைகளின் பணி தற்போது முடிவடைந்துள்ளது. இந்த பாதை நாளை அதாவது நவம்பர் 27ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னை மெரினாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளி சிறப்பு பாதையை நாளை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் திறந்து வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் சென்னை மெரினா போலவே விரைவில் பெசண்ட் நகர் கடற்கரையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதைகள் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது
 
Edited by Mahendran