Daily Horoscope
✕

பகலில் குறையும் ... இரவில் மீண்டும் அதிகரிக்கும்! சென்னைக்கு பிரதீப் ஜான் கொடுத்த அலர்ட்

Updated: புதன், 21 அக்டோபர் 2026 (09:51 IST)
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் , சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று இரவு தொடங்கிய மழை விடிய விடிய பல்வேறு பகுதிகளில் கொட்டித் தீர்த்தது.  இதனால் தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்கியதுடன், சில இடங்களில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
 
இந்த நிலையில், சென்னையில் இன்று பகல் நேரத்தில் மழையின் தீவிரம் குறையும் என்றும், இரவு நேரத்தில் மீண்டும் மழை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும்  எல்-நினோ தாக்க ஆய்வுக் குழு உறுப்பினர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
 
தற்போது மழை மேகங்கள்  பொன்னேரி, பழவேற்காடு பகுதிகளை நோக்கி நகர்ந்துள்ளதாகவும் , இதனால் சென்னையில் பகலில் வெயில் தலைகாட்ட வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இருப்பினும் நகரின் ஒரு சில பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளார்.
 
மேலும்,  இன்று இரவு முதல் நாளை காலை வரை சென்னையில் மீண்டும் மழை அதிகரிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
 
அதேநேரத்தில், நேற்று இரவு சென்னையில் பெய்த மழையைப் போன்ற தீவிரமான மழை இன்று இரவு இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார். வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வரும் நாட்களிலும் மழைக்கான வாய்ப்பு தொடர்ந்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
About Author
சு. பாலகிருஷ்ணன்
18 ஆண்டுகள் தமிழ் முன்னணி  நாளிதழ்களின் டிஜிட்டல் செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.  அரசியல், பொழுதுபோக்கு செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.  .... Read More

எல்லாம் காட்டு

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை!.. யார் இந்த மீனாட்சி நாச்சியார்?..

விஜய்க்கு காங்கிரஸ் தலைவர் பதவி!.. மாணிக்கம் தாகூர் கருத்துக்கு கே.வி.தங்கபாலு விளக்கம்...

சிக்கிய இன்ஃப்ளூயன்சர்.. காட்டிக்கொடுத்த டாட்டூ!.. நிஷாந்தை நெருங்கும் போலீஸ்!..

இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி, ராகுல் காந்தி மரணம் குறித்து சர்ச்சை பதிவு.. கங்கனா ரனாவத் மீது வழக்குப்பதிவு...

டெலிவரி ஊழியர்கள் என்ன கொத்தடிமைகளா? பாஜகவுக்கு ராகுல் காந்தி கேள்வி..

அடுத்த கட்டுரையில்
Show comments