Daily Horoscope
✕

சென்னை பாரிமுனையில் 4 மாடி கட்டிடம் விழுந்து விபத்து.. இடிபாடுகளில் சிக்கியவர் எத்தனை பேர்?

Written By Mahendran
Updated: புதன், 19 ஏப்ரல் 2023 (13:13 IST)
சென்னை பாரி முனையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளானதை அடுத்து அந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. 
 
சென்னை பாரிமுனையில் அரண்மனைக்காரன் தெருவில் உள்ள பழமையான கட்டடத்தை சீரமைக்கும் பணி நடந்து வந்தது. இந்த நிலையில் அந்த கட்டிடம் திடீரென இன்று இடிந்து விழுந்ததை அடுத்து அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இது குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்ப பணிகளை கவனித்து வருகின்றனர். கட்டிட இடிப்பாடுகளுக்கு இடையில் நான்கு பேர் சிக்கி உள்ளதாகவும் அவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
சென்னையின் பிசியான பகுதியான பாரிமுனையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

இடைத்தேர்தல் முடிவு!.. இப்போது தவெகவின் பலம் என்ன?..

எம்.ஜி.ஆரின் வரலாற்றையே மாற்றிய விஜய்!.. தாராபுரத்தில் விசில் சின்னம் செய்த சாதனை..

நினைத்ததை முடிப்பவர்.. நாளை நமதே.. வரலாறும் நமதே!.. சிபிராஜ் டிவிட்!..

2 தொகுதிகளிலும் வெற்றி.. தவெகவுக்கு மேலும் 2 எம்.எல்.ஏக்கள்!..

இது மக்களுக்கு கிடைத்த வெற்றி!. மிருக குண பேச்சுக்கு மக்கள் கொடுத்த பதிலடி!.. முதல்வர் விஜய் பதிவு!..

அடுத்த கட்டுரையில்
Show comments