1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 19 ஏப்ரல் 2023 (10:30 IST)

பயண அட்டை இருந்தால் தான் வாகனம் நிறுத்த அனுமதி: சென்னை மெட்ரோ அறிவிப்பு..!

சென்னை மெட்ரோ வாகன நிறுத்தும் இடங்களில் பயண அட்டை இருந்தால் மட்டுமே வாகனங்களை நிறுத்த அனுமதிக்கப்படும் என சென்னை மெட்ரோ அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அதில் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யாதவர்களும் வாகனத்தை நிறுத்திவிட்டு செல்வதாக புகார் எழுந்தது. 
 
இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்த இன்று முதல் பயண அட்டை கட்டாயம் என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் பயண அட்டையை பயன்படுத்தி மெட்ரோவில் பயணம் செய்பவர்களுக்கு 20% தள்ளுபடி அளிக்கப்படும் என்றும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது 
 
இந்த புதிய அறிவிப்பால் மெட்ரோ ரயில் பயணம் செய்பவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran