வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 19 ஏப்ரல் 2023 (10:47 IST)

வேலையில்லா இளைஞர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.. சென்னையில் 21ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம்..!

employment
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அவ்வப்போது தனியார் நிறுவனங்கள் வேலை வாய்ப்பு முகாமை அமைத்து வரும் நிலையில் சென்னையில் ஏப்ரல் 21ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஏப்ரல் 21ஆம் தேதி கிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளன. காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் 8ஆம் வகுப்பு முதல் ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு ஆகியவை படித்த வேலையில்லாத இளைஞர்கள் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

20க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் இந்த வேலை வாய்ப்பு முகாமில் தங்களுக்கு தேவையான பணியாளர்களை வேலைக்கு ஆள் எடுக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த முகாமில் கலந்து கொள்ள இருப்பவர்கள் ww.tnprivatejobs.tn.gov.in  என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva