திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 2 டிசம்பர் 2022 (08:24 IST)

அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை! வானிலை எச்சரிக்கை

rain
அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
வடகிழக்கு பருவக்காற்று மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக சென்னை உள்பட கடந்த சில நாட்களாக தமிழக பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 
 
அந்த வகையில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இன்னும் ஒரு மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
லும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
Edited by Siva