சென்னையில் 5 மாதங்களுக்குப் பிறகு கொரோனா மரணம் இல்லாத நாள்!
சென்னையில் கொரோனா இரண்டாம் அலை ஏற்பட்டு ஓய்ந்துள்ள நிலையில் நேற்று மரணமில்லா நாளை சந்தித்துள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் பரவிய கொரோனா இரண்டாம் அலை கோரத்தாண்டம் ஆடி பல ஆயிரக்கணக்கான உயிர்களைக் காவு வாங்கியது. இதனால் தலைநகர் சென்னையில் தினமும் நூற்றுக்கணக்கில் சாவு எண்ணிக்கை நிகழ்ந்துகொண்டே இருந்தது. அதன் பின் அரசு, மருத்துவர்கள் மற்றும் மக்களின் கடுமையான உழைப்பால் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்தது.
இதனால் மரண எண்ணிக்கையும் குறைந்து வந்தது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு நேற்று சென்னையில் பூஜ்ய எண்ணிக்கை கொரோனா எண்ணிக்கையை சந்த்தித்துள்ளது. இது மக்கள் மத்தியில் மிகப்பெரும் ஆறுதலை சந்தித்துள்ளது.