1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 12 ஜூலை 2021 (07:24 IST)

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் இன்று சந்திப்பு: ரஜினிகாந்த் திட்டம் என்ன?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து உடல் பரிசோதனை முடித்து சென்னை திரும்பிய நிலையில் இன்று அவர் மாவட்ட செயலாளர்களை சந்திக்க இருப்பதாக அறிவித்து இருந்தார் 
 
இதனையடுத்து நேற்று இரவே பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் கிளம்பி சென்னைக்கு வந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சிலர் இன்று அதிகாலை வந்துள்ளதை அடுத்து சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தின் முன் தற்போது மாவட்ட செயலாளர்கள் ரஜினியை சந்திக்க தயார் நிலையில் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய சந்திப்பின் போது ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் சிலர் விலகியதை அடுத்து புதிய நிர்வாகிகள் நியமனம் நடைபெறும் என்றும் ரஜினியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது 
 
இன்றைய ஆலோசனையில் ஒரு சில முக்கிய முடிவுகளை ரஜினிகாந்த் வெளியிடுவார் என்றும் அதன்பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து சில முக்கிய அறிவிப்புகளை அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மாவட்ட செயலாளர்களை ரஜினிகாந்த் சந்திக்க இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது