1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 12 ஜூலை 2021 (07:26 IST)

சென்னையில் இன்றும் விலையுயர்ந்த பெட்ரோல் விலை: இன்றைய விலை என்ன?

கடந்த சில மாதங்களாக சென்னையில் கிட்டத்தட்ட தினமும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் இன்றும் பெட்ரோல் விலை உயர்ந்து உள்ளது என்பதும் ஆனால் அதே நேரத்தில் டீசல் விலை குறைந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 காசுகள் உயர்ந்துள்ளதால் பெட்ரோல் விலை ரூ.101.92 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது. அதே போல் டீசல் விலை 15 காசுகள் குறைந்துள்ளது இடத்தில் டீசல் விலை ரூபாய் 94.24 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
சென்னையில் பெட்ரோல் விலை கிட்டத்தட்ட 102 ரூபாய் உயர்ந்துவிட்டதை அடுத்து பொதுமக்கள் கடும் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். இதே ரீதியில் சென்றால் இன்னும் ஒரு சில நாட்களில் பெட்ரோல் விலை ரூபாய் 110 என்ற உயர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் டீசல் விலை விரைவில் ரூ.100ஐ தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் வரிகளைப் குறைப்பது ஒன்றே வழி என்று கூறப்பட்டு வருகிறது