வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 12 ஜூலை 2021 (08:20 IST)

1 வாரத்திற்கு பின் மீண்டும் இன்று தடுப்பூசி முகாம்: அதிகாலை முதலே குவிந்த மக்கள்

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி முகாம் நிறுத்தப்பட்டு இருந்தது என்பதும் இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நேற்று சென்னைக்கு 5 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பி உள்ளதை அடுத்து இன்று முதல் மீண்டும் தடுப்பூசி முகாம் தொடங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது. ஈரோட்டில் ஒரு வாரத்திற்குப் பிறகு இன்று தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்றும் கோவை மாவட்டத்திலும் இன்று தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று அரசு மருத்துவமனைகளிலும் தடுப்பு முகாம்களிலும் தடுப்பு ஊசி போடப்படும் என்று என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அதிகாலை 4 மணி முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் காட்சிகளை ஆங்காங்கே பார்க்க முடிகிறது 
 
தடுப்பூசி போட வேண்டும் என்ற விழிப்புணர்வு தற்போது பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துள்ளதை அடுத்து தடுப்பூசி போடுவதற்கு மக்கள் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் மத்திய அரசு தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை உடனடியாக அனுப்பிக் கொண்டே இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது