வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 12 ஜூலை 2021 (08:15 IST)

சென்னையில் 179 காவல் ஆய்வாளர்கள் திடீர் இடமாற்றம்!

சமீபத்தில் திமுக ஆட்சி தொடங்கியதிலிருந்தே ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட பல முக்கிய அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர் என்பது தெரிந்ததே
 
தலைமைச் செயலாளர் உள்பட பல்வேறு அதிகாரிகள் மாற்றப்பட்ட நிலையில் தற்போது சென்னையில் 179 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
சென்னையில் 179 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்து காவல்துறை ஆணையர் சற்றுமுன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி அபிராமபுரம் சிந்தாதரிப்பேட்டை உள்ளிட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும் ஆயிரம்விளக்கு நுங்கம்பாக்கம் அயனாவரம் சைதாப்பேட்டை உள்பட 179 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்
 
சென்னையில் சட்டம் ஒழுங்கை காப்பதற்காக அவ்வப்போது எடுக்கப்ப்டும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என தமிழக அரசு காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. புதிய காவல் ஆய்வாளர்கள் இன்று பொறுப்பேற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது