சென்னையில் 2 இடங்களில் 33 பேருக்கு கொரோனா! – தீவிரமடையும் பாதிப்புகள்!
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் சென்னையில் 2 இடங்களில் 33 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தலைநகர் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. முன்னதாக குடும்பத்தில் தனிநபர் ஒருவருக்கு மட்டும் கொரோனா ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது குடும்பம் குடும்பமாக கொரோனாவால் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இன்று சென்னையில் வால்டாக்ஸ் சாலையில் நகைப்பட்டறை ஒன்றின் ஊழியர்களிடையே நடத்திய கொரோனா சோதனையில் 22 பேருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளது. அதேபோல அண்ணா நகர் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நடத்திய சோதனையில் 11 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.