திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 30 மார்ச் 2021 (12:02 IST)

தேர்தலில் வெற்றிபெறாவிட்டால் உயிரை விட்டுடுவேன்! – வைரலாகும் விஜயபாஸ்கர் போஸ்டர்!

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் விராலிமலை தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் வைரலாகியுள்ளன.

தமிழக சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடும் அதிமுகவில் விராலிமலை தொகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிடுகிறார். முன்னதாக தன் உடல்நலன் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியது வைரலானது, அதை தொடர்ந்து விஜயபாஸ்கரின் இளைய மகள் தனது தந்தைக்காக வாக்கு சேகரித்தது பெரும் வைரலானது.

இந்நிலையில் தற்போது விராலிமலை பகுதியில் சில போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் அமைச்சர் விஜயபாஸ்கர் கண் கலங்கி அமர்ந்திருக்குமாறு புகைப்படம் இடம் பெற்றுள்ளதுடன் “வெறும் 10 நாட்கள் தேர்தலுக்காக ஊருக்குள் வந்து ஓட்டு கேட்பவர்களே தோல்வியடைந்தால்ல் உயிரை விட்டு விடுவேன் என கூறும்போது 10 ஆண்டுகள் வாக்களித்த மக்களுக்காக இரவு, பகல் பாராமல் கஷ்ட காலங்களிலும் உடன் நின்ற என்ன்னுடைய முடிவு எப்படி இருக்கும் முடிவு உங்கள் கைகளில்” என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.